Header Ads

  • சற்று முன்

    சென்னை சென்ட்ரலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்.... வாலிபர் கைது.வெளிமாநிலங்களுடன் கூட்டு கடத்தலா போலிசார் விசாரணை.







    சென்னை சென்ட்ரலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்


    சென்னையில் கஞ்சா கடத்தி வருவது என்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சுமார் 24 1/2 கிலோ கஞ்சா போலிஸார் பறிமுதல் செய்தனர். 


     இச்சம்பவத்தை அடுத்து  மாதவரம் பகுதியைச் சேர்ந்த எபினேசர்(22) என்பவர் கஞ்சா கடத்தி கைது செய்யப்பட்டார்.

    இந்நிகழ்வுக்கு முன்னர் இதேபோல் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயிலில் கஞ்சாவை கடத்தி வருவதாக தகவல் வெளியானதையொட்டி  போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ரயில்வே போலீசார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.


    இதன் அடிப்படையில் கஞ்சா எங்கிருந்து வாங்கி வந்தார் மற்றும் சென்னையில் எந்தெந்த இடங்களில் விற்பனை செய்ய கொண்டு செல்கிறார் என்பது குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.


    வெளிமாநிலத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கஞ்சா கடத்தி வருவது அப்பட்டமாக தெரியவந்தது.இந்நிலையில் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய குழுவின் மூலம் தகவல் வெளிவந்தையொட்டி ஆராய்ந்து பார்த்துள்ளனர் . இதையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இன்ஸ்பெக்டர்கள் சசிகலா மற்றும் வடிவுக்கரசி தலைமையிலான ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 31-ந்தேதி ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்ட்ரல் ரெயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

    இந்த சம்பவத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


    இந்தநிலையில் நேற்று அதிகாலை சென்டிரல் ரெயில்நிலையம் 9-வது நடைமேடையில் வந்து நின்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில்  சோதனை செய்துள்ளனர். அப்போது டி-2 பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சோதனை செய்ததில்  கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம்  விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டது. 


    தொடர்ந்து நடந்த கஞ்சா கடத்தலின் விளைவாக இன்று அதே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளிமாநில ரயில் பெட்டியில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை எபினேசர் என்ற இளைஞன் கடத்தி வந்துள்ளார். 

    அவரை கையும் களவுமாக ரயில்வே போலிசார் கைது செய்துள்ளார்கள். கடந்த 3 நாட்களில் மட்டும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 24½ கிலோ கஞ்சா ரெயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது. 


































































































    No comments

    Post Top Ad

    Post Bottom Ad