Header Ads

  • சற்று முன்

    ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம்!

     





    இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல; இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; பல மொழிகள் பேசுவதே இந்திய நாட்டின் சிறப்பம்சம் ஆகும்”

    இந்தியா சம்த்துவம் வாய்ந்த நாடு .இங்குஅனைவரும் பாரதத்தாயின் முன்பு அனைவரும் சமம். எந்த ஏற்றத்தாழ்வு கிடையாது.ஆனால் மொழி பிரச்சனை இப்போது ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு மக்களிடையே தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றனர். மொழி என்பது  பிறர் புரிந்து கொள்ள உதவும் பரிமாற்றமே தவிர கட்டயா மொழி என்பது கிடையாது.


    இந்தி பயன்பாட்டிற்கு வருவது என்பது  விஷயம் அல்ல அதை சார்ந்த மற்ற மொழிகள் நிலை என்ன என்பது தான் முக்கியம். மொழியை வைத்து அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள்தான் பதிலடி குடுக்க வெண்டும் என்றும் அவர் கூறினார்.


    நாம் அனைவரும் சாதி,மதம் ,மொழி போன்ற பிரிவில் பிரிந்து இருந்தாலும் இந்தியர் என்ற உணர்வு எப்போதும் புரிந்து கொள்ளவெண்டும்.


    எம்.பிக்கள் தத்தமது தாய் மொழியில் பேசும்போது அதே சலுகை அமைச்சர்களுக்கும் தரப்படாதது நியாயமில்லை என்ற வாதமும் கிளம்பியுள்ளது. மொத்தத்தில் இந்தியா என்ற ஒரே நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டும் தேசிய மொழியாக இல்லாத நிலையும், தேசிய மொழிகளில் ஒன்றான ஒரு மொழியில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசலாம் அமைச்சர்கள் பேசக் கூடாது என்ற முரண்பாடான நிலையும் தான் நிலவி வருகிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad