முழுமையடயாத நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி இயக்கம்.... பதில் அளிக்குமா நிர்வாகம்???
கட்டிட பணிகள் முழுமையடையாத நிலையில் மருத்துவமனை திற்ந்துவைத்துள்ளது என்பது ஏமாற்றுவேலையாக உள்ளது.மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனை முற்றிலுமாக இயங்காமல் பாதியிலே கட்டப்படாமல் இருப்பதால் நோயாளிகள் கூட்ட நெரிசலில் பாதிப்படைகின்றனர்.
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் ரூ.381 கோடியே 76 லட்சம் மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது.இதனை பிரதமர் மோடி ஜனவரி மாதம் திறந்து வைத்துள்ளார்.
நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவு, படுக்கை வசதி மற்றும் ஆய்வுக் கூடம், உடற்கூறியல் அருங்காட்சியகம் மற்றும் உடற்கூறியல் ஆய்வறை உள்ளிட்ட கட்டிடப் பணிகளும் முடிவடையாத காரணத்தால் அங்கு காண்பிக்க வரும் எல்லா பிரிவின் நோயாளிகள் ஒன்றோடு ஒருவர் கலந்து எங்கு சென்று காண்பிப்பது என்று குழப்பமடைகிறார்கள்.
மொத்தத்தில், மருத்துவக் கல்லூரிக்கு மிக முக்கியத் தேவையான மருத்துவமனை செயல்படாத நிலையில் மருத்துவக் கல்லூரி இயங்கத் தொடங்கியிருக்கிறது என்பது வியப்பில் ஆழ்த்துகிறது.‘கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தை மையமாகக்கொண்டு மத்திய, மாநில அரசுகள் மாவட்டத்திற்கு ஒருமருத்துவக் கல்லூரி தொடங்க திட்டமிட்டு, திட்டமிட்டது மட்டும் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளை அமைத்து வருகின்றன.
ஏன் இன்னும் தாமதம் என்று விசரானை மேற்கொல்லும் போது ஏதேதோ கூறி தப்பித்து செல்கிற்னர் கல்லூரி நிர்வாகிகள். விசாரனையில் ஆட்சி மாற்றம் காரணமாக ஒப்பந்ததாரருடன் ஏற்பட்ட பிரச்சினையால் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை கட்டிடப்பணிகள் நிறைவடைவதில் தாமதம் நிலவுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷாவிடம் கேட்டபோது, “கல்லூரிக்கான வகுப்பறை கட்டிடப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாகவும், முதலா மாண்டு வகுப்புகள் தொடங்கி,மாணவர்கள் படிப்பு மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளும் இயங்கி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக் கட்டிடப் பணிகள் ஓரிரு வாரங்களில் முடிந்து, கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனையில் ஏற்கெனவே இயங்கி வரும் மருத் துவம் சார் இயந்திரங்கள், படுக்கை வசதிகள், ஆய்வக வசதிகள் இங்கு மாற்றம் செய்யப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு மருத்துவம் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமே தற்போது பயில்வதால், அவர்களுக்கு பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அந்த மாணவர்களுக்கு ஆய்வகம் செல்லும் அவசியம் இருக்காது எனவே தற்போது அது தொடர்பான படிப்புகள் படிக்க காலாவகாசம் இருப்பதால் அதற்குள் கட்டிடப்பணி முழுவதும் நிறைவடந்துவிடும் என்று தெரிவித்தார்.
No comments