Header Ads

  • சற்று முன்

    இஸ்லாமிய பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வேன்” - யோகி ஆட்சியில் பகிரங்க மிரட்டல் விடுத்த சாமியார்





    இஸ்லாமிய பெண்களை கடத்தி வன்கொடுமை செய்வேன் என சாமியார் ஒருவர் பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் மிரட்டல் விடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தில் அறங்கேறிய இச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மசூதி அருகே கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஜீப் காரில் வந்த சாமியார் ஒருவர் பொதுமக்களிடம்  பேசியுள்ளார்.


    அப்போது அந்த சாமியார், “இப்பகுதியில் வசிக்கும் இந்து பெண்களுக்கு இஸ்லாமியர்கள் ஏதேனும் தொந்தரவு செய்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வேன்" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இவரின் தூண்டுதலால் அப்பகுதியில் வசிகும் சிலர் மதபுரட்சியை உண்ர்த்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால்  பேச்சைக் கேட்ட அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டுள்ளனர். இச்சம்பவம் அங்குள்ள மக்களிடையே அச்சத்தையையும் பரபரப்பையும் ஏர்படுத்தியுள்ளது.


    இதையடுத்து சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அப்பகுதி வாழ் மக்கள். இதனால் பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் என்பவர் காவல்நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.


    ஆனால் போலிஸார் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. காவலர் உரிய நடவடிக்கை எடுக்கததால்  அவர் சாமியார் பேசிய வீடியோவை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இந்த வீடியோ வைரலானதால் 6 நாள் கழித்து சாமியார் மீது நடவடிக்கை எடுப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.



    மேலும் போலிஸார் தெய்வமாக போற்றப்பட வேண்டிய பெண்களை மதிக்காமல் இருந்ததாலும் , அலட்சிய நடவடிக்கை மேற்கொண்டதற்காகவும் தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இதுபோன்ற சம்பவங்களில் போலிஸார் வாய்மூடி கண்கள் குருடாய்  இருப்பதால் தான் பெண்கள் தினமும்  ஒரு சிலஆண்களால் வஞ்சிக்கப்படுகிராள்.பெண்களுக்கு இழைத்த அநியாத்திற்க்கு எதிராக பேசிய சாமியார் உடனே எந்த விசாரனையுமின்றி கைது செய்ய வேண்டும்"  மகளிர் குழு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad