16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்......கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தப்பட்டார்.
மத்யப்பிரதேசம் குவாலியர் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காராத்தால் வஞ்சிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவாலியரில் உள்ள பல்கலைக்கழக பகுதியில் உள்ள பல மாடி கட்டிடத்தில்11 ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வந்தார். அதே பகுதியில் அக்கம் பக்கம் வசித்து வந்த 3 இளைஞர்கள் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி, ஏப்ரல் 22 ஆம் தேதி தனது தாய் கடையில் இருந்ததால் வீட்டில் தனியாக இருந்துள்ளது விசாரனையின்போது தெரிய வந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து பல மாடி கட்டிடத்தில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து கதவை உள்ளே இருந்து பூட்டினர். மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவள் கர்ப்பமாகி இருப்பது மே மாதத்தில் சிறுமிக்கு தெரியவந்தது. இதனால் சிறுமி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை அணுகி அவரிடம் இது குறித்து தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் அவளுக்கு ஒரு மாத்திரையைக் கொடுத்து அதை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.
கருக்கலைப்புக்குப் பிறகு, சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார், அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார். இக்கொடுரத்தை விவரித்து போலிசார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதையொட்டி குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இருவர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
No comments