Header Ads

  • சற்று முன்

    புதிய கல்விக் கொள்கை.." முக்கியத்துவம் அறிந்த பின்பே விளக்கம் அளித்திருப்பதாக ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதில்!





    புதிய கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்த பின்பே தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் தெரிவித்தார்.


    பா.ஜ.க அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை தி.மு.க அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோதில் இருந்தே எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தெளிவாகக் கூறிவருவதாக தகவல் வெளியானது. மேலும் மாநிலத்திற்கு என்றே தனிக் கல்விக்கொள்கையும் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் எஎன்பதில் தீவிரமாக தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.  திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கூட, புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உரை சாற்றினார்.



    அப்போது பேசிய ஆளுநர், "புதிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் இருப்பதாகவும் புதிய கல்விக் கொள்கையைப் பலரும் முழுமையாகப் படிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும்" தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆளுநரின் இந்த பேச்சுக்கு  அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.


    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "புதிய கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்த பின்னரே தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர்  கூறிய நிலையில், மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உரிய நலவடிக்கை தெரிவிப்பார் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். புதிய கல்விக்கொள்கையில் 3 ,5, 8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம். அவ்வாறு பொதுத்தேர்வு கொண்டுவந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும்" எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad