ஸ்கூல் வேனில் 15 அடி நீள மலைப் பாம்பு! அலறவைத்த பகீர் சம்பவம்!
குழந்தை செல்லும் பள்ளி பேருந்தில் 15 அடி நீளமுள்ள ராட்சட்திர மலைப் பாம்பு இருந்தது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில் போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
உத்
தரபிரதேசம் மாநிலத்தில் ரேய்பரேலி என்ற பகுதியில் பள்ளி பேருந்தில் 15 அடி நீளமுள்ள ராட்ச மலைப் பாம்பு புகுந்துள்ளது. பாம்பைப் பேருந்திலிருந்து மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈட்டுப்பட்டிருந்த நிலையில் மலைப் பாம்பு சீறியுள்ளது.
பேருந்தில் இன்ஜின் கீழ் உள்ள ஓட்டையில் சிக்கிக் கொண்ட மலைப் பாம்பை வெளியில் எடுக்க மீட்புக் குழுவினர் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். பெரும் போராட்டத்திற்குப் பின்பு மலைப் பாம்பைப் பத்திரமாக மீட்புக் குழு பேருந்தில் இருந்து மீட்டு எடுத்துள்ளனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
No comments