காதல் திருமணம் செய்து கொண்ட மகளை அடித்து இழுத்துச் சென்ற தந்தை... வழக்கு பதிவு செய்த போலீசர்!!!
ஆந்திராவில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை அவரது பெற்றோர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயின்று வரும் சுஷ்மாவும். சுவிம்ஸ் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வரும் மோகன கிருஷ்ணாவும். ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுஷ்மாவின் வீட்டில் இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரகிரியில் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த சுஷ்மாவின் பெற்றோர் கடந்த 7-ஆம் தேதி அன்று அடியாட்களுடன் மோகன கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று தாக்குதலை நடத்தி சுஷ்மாவை அங்கிருந்து அடித்து இழுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் இழுத்துச் செல்லப்பட்ட சுஷ்மாவை குண்டூரில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து சுஷ்மா அங்கிருந்து தப்பித்து சென்று திருப்பதி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் சுஷ்மாவின் தந்தையின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
No comments