தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்…எங்கு தெரியுமா..?
ஆண்டு தோறும் தீபாவளி தினத்தன்று, மத்திய பிரதேசம் பகுதியில் உள்ள ரத்லத்தில் அமைந்திருக்கும் மகாலட்சுமி கோவிலில் பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது.
கோவில் பிரசாதம்;.
நாம் பெரும்பாலும், கோவிலுக்குச் செல்வதே பிரசாதம் வாங்குவதற்குத் தான் என்று ஒரு சில பேர் சொல்வதைக் கேட்போம். ஒவ்வொரு கோவிலும் பிரசாதத்தின் பெயரை வைத்து அதனை அடையாளம் காண்பது போல மாறி வருகிறது. அல்லது கோவிலின் பெயர் சொன்னால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பிரசாதம் தான். அதிலும் குறிப்பாக பழனி என்றால் பஞ்சாமிர்தம், திருப்பதி என்றால் லட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தவை. கோவிலில் சாப்பிடுவதற்கென மட்டும் பிரசாதம் தரவில்லை. சில கோவில்களில் கண்ணாடி வளையல்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
பிரசாதமாக தங்கம்;.
நாம் பல கோவில்களுக்குச் சென்று பல்வேறு விதமான பிரசாதங்களை வாங்கிக் கொள்வோம். அதிலும் பெருமாள் கோவிலில் குங்குமம், துளசி போன்ற பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாறு கடவுளுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை நாம் சிறிதளவாவது சாப்பிட வேண்டும் என கூறுவர்.
ஆனால், இவற்றில் ஆச்சரியத்தக்கமாக இருப்பது தங்கத்தை பிரசாதமாக வழங்குவர். தங்கம் விற்கும் விலைக்கு யார் தங்கத்தை பிரசாதமாக வழங்குவர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். ஆனால், இது முற்றிலும் உண்மை.
ரத்னபுரி மகாலட்சுமி;.
மத்திய பிரதேசத்தில் வடமேற்கு பகுதியில் ரத்லா என்று அழைக்கப்படும் ரத்னபுரி பகுதில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஆண்டுதோறும் தங்கம் பிரசாதம் வழங்கப்படுகிறது. இது பெரும்பாலானோர்க்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாகவும், இந்த கோவிலுக்கு செல்ல நம்மை ஊக்குவிப்பதாகவும் அமைகிறது.
இறைவனது பிரசாதம்;.
பெரும்பாலும், அனைத்து கோவில்களிலும் காணிக்கையாகக் கிடைக்கப்பெறும் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை கோவில் திருப்பணிக்காக பயன்படுத்துவது வழக்கம் ஆகும். ஆனால், இந்த கோவில் சற்று வித்தியாசமாக ஆண்டுதோறும் தீபாவளி தினத்தில், மகாலட்சுமியின் அருள் பெற வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அது மட்டுமல்லாமல், இந்த கோவிலில் தரும் பிரசாதத்தை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். இது இறைவனால் வழங்கப்பட்டதாகக் கருதி, அதனை பூஜித்து வருகின்றனர்
தங்கம், வெள்ளி, மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்;.
தீபாவளி தினத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பிரசாதமாக வழங்கும் இந்த கோவில் முழுவதும் சுமார் 100 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த அலங்காரத்தைக் காண, ஆண்டுதோறும் ஏராளக்கணக்கானோர் தீபாவளி தினத்தில் இந்தக் கோவிலுக்கு பயணம் புரிவர் எனவும் கூறப்படுகிறது.
யாருக்கு இந்த பிரசாதம்;.
தீபாவளி தினத்தில், இந்த கோவிலில் உள்ள மகாலட்சுமியை தரிசிக்க செல்லும் பக்தர்களில் திருமணம் ஆன பெண்களுக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பிரசாதமாக தங்கம் ஏன்?
பல கோவில்களில் ஏழை எளியோரின் பசியை நீக்குவதற்கு பிரசாதமாக பொங்கல், புளியோதரை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் ஏழை எளியவர்களின் வறுமையை போக்கும் விதமாக தங்கம் வெள்ளி போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இருந்த போதிலும், இங்கு வழங்கப்படும் தங்கத்தை விற்பனை செய்யாமல், அதனை அதிர்ஷ்டமாகப் பெற்றுக் கொள்வர்.
No comments