பள்ளி மாணவி மர்ம மரணம்....
திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மனைவி சந்தியா தேவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன இதில் மூத்த மகள் காயத்ரி அவினாசியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில்10 பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அங்குள்ள ஆண்கள் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் காயத்ரிக்கும் இடையே காதல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் இரண்டு பேரையும் கண்டித்துள்ளனர்.
மேலும் காயத்ரி அவரது பெற்றோர் அவிநாசி பள்ளியிலிருந்து மாற்றி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர். அங்கு இருந்த விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார் கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கு சென்று காயத்ரி அதன் பிறகு விடுதிக்கு செல்லவில்லை. இதை அடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயத்ரி பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை பின்னால் இதைக் குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருப்பூர் அம்மாபாளையம் எஸ். ஆர். கே. நகர் பகுதியில் உள்ள காரைக்குடியில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் மாணவி ஒருவர் இறந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை எடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.அப்போது அங்கு இறந்து கிடந்தது காயத்ரி என்பது தெரிய வந்தது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காயத்ரி பாறை குழிக்குள் குதித்து தற்கொலை செய்தார அல்லது காதல் விவாகரத்தில் மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காயத்ரியை கொலை செய்தனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments