குளிர்பானத்தில் 'ஆசிட்': மாணவன் உயிரிழப்பு😭
கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிலை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.- 11 வயது மகன் அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ளா தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்று விட்டு தேர்வு எழுதி முடிந்து மதியம் வீட்டிற்கு வரவேண்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவர் 6 ம் வகுப்பு மாணவனிடம் குளிர்பானம் ஒன்றை கொடுத்து குடிக்க கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
அதனை அந்த சிறுவனும் நம்பி குடித்து கொண்டிருந்த போது பின்னால் இருந்து ஓடி வந்த சிறுவன் ஒருவன் மோதி உள்ளான் இதில் குளிர்பான பாட்டில் கீழே விழுந்துள்ளது. அதை தொடர்ந்து அந்த மாணவன் வழக்கம் போல் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டி-ல் இருந்த சிறுவனு-க்கு இரவு நேரத்தில் திடீரெனகுளிர்காய்ச்சல் ஏற்பட்டுஉள்ளது. பெற்றோர் சிறுவனை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் பகுதியில் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு செண்று காய்ச்சலுக்கு மருந்து வாங்கி வந்துள்ளனர்.
இதை தொடர்து சிறுவனுக்கு காய்ச்சல் குறையாமல் இருந்தது. மேலும் சிறுவனின் நாக்கு வாய் உள்ளிட்ட பகுதிகளிள் புண்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பயமடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக்கொண்டு கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுவன் அருந்திய குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்ததோடு சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பள்ளியில் படிப்பில் ஏற்பட்ட போட்டியா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த மாணவனை பற்றி விசாரணை நடந்து வந்த நிலையில் அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாணவருக்கு சக மாணவனின் தாயார், விஷம் கொடுத்து உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் படிக்கும் சகமாணவன் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments