Header Ads

  • சற்று முன்

    #🥰தீபாவளி சிறப்புக் கதைகள்🪔

    பாதுகாப்பாய் பட்டாசு வெடிங்க குழந்தைகளே...

    தீபாவளியும் பட்டாசும்... பிரிக்கா முடியா ஒன்று. புத்தாடை இல்லாமல் கூட தீபாவளி கொண்டாடத் தயாராயிருக்கும் குழந்தைகள் பட்டாசை மட்டும் விட்டுத் தரவே மாட்டார்கள் பெரும்பாலும். ஸ்வீட்ஸ், புது டிரெஸ் ரகம் ரகமாக பெற்றோர் குட்டீஸ்களுக்கு வாங்கி கொடுத்தாலும் அவர்கள் கண் எல்லாம் பட்டாசு மேல் தான். வீட்டில் பெரியவர்கள் சுத்தம் செய்தல், சமைத்தல் என பிசியாக இருந்தால், 'என்ன பட்டாசு வாங்கலாம்' என குழந்தைகள் அக்கம் பக்கத்து நண்பர்களை கேட்டு லிஸ்ட் போட்டு கொண்டு இருப்பார்கள்.

    இளங்கன்று பயம் அறியாது என்பதை பட்டாசு வெடிக்கும் பிஞ்சு விரல்களைப் பார்த்தாலே புரியும். அதனால் பெற்றோர்கள், மத்தாப்பு, பட்டாசு அபாயங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்து கூறவேண்டும். தீபாவளி சமயத்தில் ஏராளமானோர் விபத்துகள் மற்றும் காயங்களுக்கு ஆளாகின்றனர். யாரும் காயமடையாமல், உங்கள் குழந்தைகளுடன் இந்த தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட, சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.


    சாட்டை, பென்சில், கம்பித்திரி, கலர் தீப்பெட்டி என பல மத்தாப்புகள் இருக்கும். இது மட்டுமல்லாமல் புது புது ரகங்களும் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் ஆகும். ஒவ்வொரு மத்தாப்பும் ஒவ்வொரு மாதிரி பற்ற வைக்க வேண்டும். அதனால் குழந்தகள் கூடவே இருந்து அவற்றை எப்படி பற்றவைக்க வேண்டும் என சொல்லி கொடுப்பது மட்டுமல்லாமல் கண்காணிப்பதும் அவசியம். புஸ்வானம் புஸ்ஸுனு போகாமல் சில வெடிக்கவும் செய்யும். அதனால் பட்டாசு கொளுத்தும் நேரம் முழுவதும் குழந்தைகளுடன் இருங்கள்.
    நாம் சமையல், வேலை என பிசியாக இருந்தால், குழந்தைகள், தீப்பற்ற தீப்பெட்டி மற்றும்  , பட்டாசுகலை   எடுத்து கொண்டு ஓடிவிடக்கூடும். அதனால் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், பட்டாசுகள் போன்ற எளிதில் தீ பற்றும் பொருட்களை அவர்களிடமிருந்து பாதுகாத்து வைக்கவும். அந்த பொருட்களை பெரியவர்களுடன் சேர்ந்து பற்ற வைக்கவும் அறிவுறுத்தவும்.

    தீபாவளிக்கு எப்போதும், பட்டு மற்றும் பள பளக்கும் துணிகளை வாங்குவோம். ஆனால் பட்டாசு வைக்கும் போது இதுபோன்ற எளிதில் தீப்பற்றும் துணிகளை அணிவிக்க வேண்டாம். அதற்கு மாற்றாக தீப்பற்றாத, ஜீன்ஸ், காட்டன் துணிகளை அவர்களுக்கு அணிவிக்கலாம். கூறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பட்டு பாவடை, லாங் சுடிதார் போன்றவை வேண்டவே வேண்டாம். அதேபோல் ஆங்காங்கே தீ துகிள்கள் இருக்கும் என்பதால் குழந்தைகள் காலணி அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

    தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. நாளைய உலகம் அவர்கள் உடையதே, அதனால் நீங்கள் அவர்களுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு குறித்து புரிய வைக்க வேண்டும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad