ஆற்றில் குளிக்கப்போன இளைஞர்கள் சடலமாக மீட்பு..
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள சரபங்காற்றில் நேற்று மாலை இளைஞர்கள் சிலர் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கவுதம் மற்றும் ஐயப்பன் நீரில் அடித்துச் செய்யல்லப்பட்டனர்.
இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தற்போது இரு இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றிள் குளிக்கப் போன இளைஞர் சடலமாக வீடு திரும்பியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments