ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்து.நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுனர்கள் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து
ஒன்று மதுரையை நோக்கிச் சென்றது. இந்த பேருந்து சரியாக பாம்பன் பாலத்தில்
சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. உடனடியாக அந்த பேருந்தின்
ஓட்டுனர் வாகனத்தை நிறுத்துவதற்கு பிரேக் பிடித்துள்ளார். ஆனால் நேற்று இரவு
முழுவதும் பெய்த கனமழை காரணமாக பாம்பன் பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால்
பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்தும் பேருந்து நிற்காமல் சென்றது.
இதனால் எதிரே ராமேஸ்வரம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் படுகாயமடைந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments