முந்திக் கொண்டு வந்த..ஓ,பி.எஸ்....இ.பி.எஸ்.தனித்தனியாக கட்சி கொடிகளை ஏற்றினர்...
சென்னை.
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைம கழகம் கோலாகலம் பூண்டுள்ளது.. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு இன்று காலை வருகை தந்தார் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அலுவலகம் அவருக்கு, ஆதிராஜாராம், சத்யா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுடன் திரண்டு வந்து மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்..
எ... பழனிசாமி, தலைமை கழக வளாகத்தில் உள்ள கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. பிறகு அதிமுக கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.
ஜெ.ஜெ.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அனைத்து பிரிவு அணியினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்..
அதேபோல, பெருமிதம் பொங்கும் இந்த விழாவை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை, வார்டு, வட்ட மாவட்ட அளவிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்.
அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆரின் தி.நகர் நினைவு இல்லத்தில், எம்.ஜி.ஆர். சிலைக்கு. மாலை அணிந்து மரியாதைச் செலுத்தினார்கல்.. இன்று காலை 9 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்குச் சென்று அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளையும் அளிக்க உள்ளார்.. இதற்காக தொண்டர்களுக்கும் பிரத்யேகமாக அறிக்கை விடுத்து அழைப்பும் விடுத்திருந்தார் ஓ.பி.எஸ்.
சசிகலாவை பொறுத்தவரை,
சென்னை ராமாவரத்தில் அதிமுக பொன்விழாவை கொண்டாட உள்ளதாக தெரிகிறது. ராமாவரத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அதிமுக பொன்விழாவில் சசிகலா பங்கேற்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்களுக்கு அவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். கட்சியின் பேச்சாளர்கள், மூத்த முன்னோடிகள், கலைக் குழுவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரை கவுரவித்து, நலத்திட்ட உதவிகளையும் சசிகலா வழங்க உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் 3 தலைவர்களும், 3 இடங்களில் விழாவை கொண்டாட தீவிரமாகி வருகிறார்கள்.
51-வது ஆண்டில் இந்த தொடக்க விழாவையொட்டி, அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்..
No comments