ஆத்தாடி எத்தத்தண்டி.. 5 அடி முதலையை முழுசா விழுங்கிய பாம்பு.. வைரல் வீடியோ..
விலங்கினங்களில் அதிலும் ஊர்வனவில் பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியது மலைப்பாம்புகள் தான். இவை 18 முதல் 20 அடி நீளம் கொண்டவை. இந்த நிலையில், அமெரிக்காவின் புளோஃரிடா காட்டில், 5 அடி நீளம் கொண்ட பெரிய முதலையை 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கியுள்ளது. ஆனால், முதலை பாம்பின் வயிற்றில் செய்த அட்டகாசத்தால், பாம்பும் இறந்துவிட்டதாம்.
அதன்பின்னர், அந்த பாம்பின் வயிற்றை கிழித்து முழு முதலையை அப்படியே எடுத்துள்ளனர். இந்த வீடியோவை புவி விஞ்ஞானி ரோஸி மூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பயங்கரமான வீடியோவை இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
No comments