அதிர்ச்சி வீடியோ! விமான சாகச நிகழ்ச்சியில் விபத்து - 6 பேர் பலி
அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு விமானங்கள் ஒன்றுக் கொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மைதாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், அந்நாட்டுவிமான படை சார்பில் 2-ம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட விமானங்களில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரிய ரக- போயிங் [பி-17] குண்டுகள் வீசும் விமானம் மற்றும் சிறிய ரக பெல் [பி-63] கிங்கோப்ரா உள்ளிட்ட விமானங்கள் இந்த நிகழ்ச்சியில் ஈடுபட்டன. அப்போது இரு விமானங்களும் திடீரென ஒன்றுக் கொன்று மோதி தரையில் விழுந்து நொறுங்கியது. நேராக முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்ற விமானம் மோதியது. இந்த விபத்தில் 2 விமானங்களும் உடைந்து சிதறியதோடு, கீழே விழுந்து வெடித்தது. சிதறியது இந்த சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியது.
OMG - two planes collided at ‘Wings Over Dallas’ air show today
— James T. Yoder (@JamesYoder) November 12, 2022
This is crazy
pic.twitter.com/CNRCCnIXF0
No comments