Header Ads

  • சற்று முன்

    அதிர்ச்சி சம்பவம்.. புது காதலனுடன் இணைந்து கூலிப்படையை ஏவிய காதலி!!


    கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே உள்ள மாத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின். டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றி வந்த இவருக்கும், அணக்கரை பகுதியை சேர்ந்த சேர்ந்த 19 வயது ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஒருவருக்கொருவர் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவினிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து பிரவினும் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து வைக்கலாம் என ஜெஸ்லின் வீட்டார் கூறியுள்ளனர். இதனால் நெருக்கம் அதிகரித்து இருவரும் முத்தமிட்டு கணவன் மனைவி போல் சுற்றி திரிந்து மாறி மாறி பரிசு பொருட்களை வழங்கி தங்கள் காதலை பலப்படுத்தி வந்துள்ளனர்.


    இந்த நிலையில் ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவின் உடனான தொடர்பை மெல்ல  விலக்கி கொள்ள அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பிரவின் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். இதில் ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதையும் அவருடன் பைக்கில் சுற்றி திரிவதையும் கண்ட பிரவின் ஜெஸ்லினை கண்டித்துள்ளார். 

    இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் தான் தற்போது ஜெனிதை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பிரவினிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரவின் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு ஜெஸ்லின் பரிசு பொருட்களை திரும்ப தருவதாக கூறி நேற்று முன்னாள் காதலன் பிரவினை வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். 

    பிரவின் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் புதிய காதலன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஜெஸ்லின் பிரவினை பின் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி எதிரே  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொண்ட கூலிப்படை கும்பல் பிரவினின் இருசக்கர வாகனத்தை மோதி கீழே தள்ளி விட்டு சரமாரியாக பிரவினை தாக்க தொடங்கினர்.


    இதை ஜெஸ்லின் புதிய காதலனுடன் ஜெனித்துடன் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில், அங்கு திரண்ட பொதுமக்கள் காயமடைந்த பிரவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    தாக்குதல் குறித்து பிரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் காதலி ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய நபர்கள் 2 பேர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை  போலீசார் தேடிவருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad