இளைஞர் துடி துடித்து பலி...
சென்னை குரோம்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து பீகாரை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் கணபதிபுரம் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணமோகன் குமார் (29), கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது மனைவி ஊர்மிளா மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்தனர். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக குரோம்பேட்டை அருகே உள்ள ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வந்ததால் அப்பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்தது.
இந்த நிலையில், காலை நிறுவனத்தின் தானியங்கி ஷட்டரை திறக்க முயன்ற போது மின்சார்ம தாக்கி உள்ளது. இதை சரி செய்ய மாடிக்கு சென்று, மின் இனைப்பை துண்டிக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். பின்னர் மேல் இருந்து சாலையில் விழுந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தனியார் நிறுவனம் அருகிலேயே வடிகால் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மின் ஒயர்கள் மூழ்கி உள்ளதால், மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உடனடியாக ஷோரூமுக்கு வந்த மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments