Header Ads

  • சற்று முன்

    குடும்பத்தையே கொன்ற கொடூரன்..


     தென்மேற்கு டெல்லி பாலம் நகரம் சேர்ந்தவர் தினேஷ் வயது[ 50. இவருடைய மனைவி தர்சனா. இந்த தம்பதிக்கு கேசவ் 25 வயது என்ற மகனும், ஊர்வசி சைனி (18 வயது மகளும் இருக்கிறார்கள். பாட்டி தேவானா தேவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துக் கொண்டிருந்த இந்த குடும்பத்தில் எமனாக வந்தது போதைப் பொருள். 


    அதாவது, மகன் கேசவ் ரொம்ப நாட்களேவே போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளார். இதனால், அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதை கண்டு பெற்றோர் கேசவை கண்டித்துள்ளனர். தொடர்ந்து குடும்பத்தினருக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


    இதையடுத்து அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்து அளித்துள்ளனர். அங்கிருந்து சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு கேசவ் தனது குடும்பத்தினருடன் மீண்டும் தகராறு செய்துள்ளார். 


    குடிப்போதையில் இருந்த அவர், குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறு செய்ய, பணம் கொடுக்க மறுத்துள்ளார் அவரது தந்தை. இதனால், ஆத்திரமடைந்த கேசவ் தனது தந்தை, தாய், தங்கை, பாட்டி நான்கு பேரையும் குத்திக்கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

     

    வீட்டில் பயங்கர அலறல் சத்தம் கேட்டு, உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்து போது நான்கு பேரும் இரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


    தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்க்க, வீட்டின் தரை பகுதியில் ஒரு பெண், குளியலறையில் 2 பேரும் பிணமாக கிடந்தனர். உடனே 4 பேர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துமனை அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையை தொடங்கினர். 


    விசாரணையில், இந்த நான்கு பேரையும் கொன்றது அந்த குடும்பத்தில் ஒருத்தன் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், கேசவை கைது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad