spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழகத்தை வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன் – செல்வப்பெருந்தகை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழகத்தை வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 115.49 கோடியும், டிசம்பர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160.61 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 682.63 கோடி.இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூபாய் 406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூபாய் 276.10 கோடி தான் தற்போது தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. நாம் கேட்ட நிவாரண நிதி ரூபாய் 38,000 கோடி. ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூபாய் 276.10 கோடியை தான் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும். தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

Video thumbnail
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் வாசல் வரை வந்து அன்புமணியை வழி அனுப்பிய இபிஎஸ்
00:31
Video thumbnail
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
00:43
Video thumbnail
ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரிசனம்
00:49
Video thumbnail
அதிமுக ஆட்சியமைக்கும் - அன்புமணி | Edappadi Palaniswami | Anbumani
01:38
Video thumbnail
அதிமுக கூட்டணியில் பாமக; எங்களுடைய கூட்டணி வெற்றிக் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி பேட்டி
01:00
Video thumbnail
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா சந்தனக்கூடு விழாவில் நீதிமன்ற உத்தரவுப்படி 50 பேருக்கே அனுமதி
01:19
Video thumbnail
பறவையைக் காப்பாற்ற கிரேனில் தொங்கிய இளைஞர்; மீட்பு வீடியோ வைரலாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றது
00:30
Video thumbnail
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், மது கிடைக்காது என வெடிவெடித்த சம்பவம்
00:47
Video thumbnail
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவிகள் | MK Stalin
02:00
Video thumbnail
ஆந்திராவில் 2ஆவது நாளாக எரியும் ONGC எண்ணெய்க் கிணறு
00:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img