spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
மனோஜ் பாரதிராஜா
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார்.

தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. மேலும் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், சாதுரியன், அன்னக்கொடி மற்றும் பேபி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள ‘எங்கே அந்த வெண்ணிலா’, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்’, ‘திருப்பாச்சி அருவாள’ ஆகிய பாடல்கள் இன்றளவிலும் ரசிகர்களிடம் மிகப்பிரபலம். எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநர், தொழில்நுட்ப கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். தனது தந்தை பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான மனோஜ், கடந்த 2023ம் ஆண்டு தான் இயக்கிய முதல் படமான ‘மார்கழி திங்கள்’ படத்தில் தனது தந்தையையே முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

மனோஜ் - பாரதிராஜா

தொடர்ந்து திரையுலகில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்து வந்த மனோஜ் பாரதிராஜா, இன்று(மார்ச் 25) மாரடைப்பால் காலமானார். இன்று மாலை வீட்டிலிருந்த போது மனோஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 48. மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
விஜய்க்கு வாக்களித்த இளைஞர்கள் | அடைந்த மாற்றம் | TVK | CM Vijay | TamilNadu | Political
13:26
Video thumbnail
பனையூர் TVK அலுவலகத்தில் மின்வெட்டு!
00:20
Video thumbnail
தவெகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்ட மன்சூர் அலிகான் சொன்ன விஷயம்!
01:26
Video thumbnail
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு ரவுடி போல் செயல்படுகிறது; - பாமக தலைவர் அன்புமணி
01:55
Video thumbnail
"திமுக முழு ஆதரவு தருகிறது" - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
02:41
Video thumbnail
மேகதாது அணை குறித்த முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு - இபிஎஸ்
01:23
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் #Tirupati #Samantha #RajNidimoru
00:55
Video thumbnail
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் - எடப்பாடி பழனிசாமி
01:12
Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றம் தொடங்கியது; தேசிய கீதம் பாடக் கூடாது என்பது இல்லை;
01:18
Video thumbnail
சட்டமன்றத்திற்கு ஆளுநர் அர்லேக்கர் வருகை.. பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் JCD பிரபாகர் வரவேற்பு
01:59
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img