கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக பட்டாஸ் திரைப்பட நடிகை
எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,தனது கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக பட்டாஸ் திரைப்பட நடிகை மெக்ரீன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்!
நெஞ்சில் துணிவிருந்தால், தனுஷின் பட்டாஸ் போன்ற திரைப்படங்கள் மூலமாக தமிழில் திரைப்படங்களில் நடித்திருந்தார் தெலுங்கு நடிகை மெக்ரீன் பிர்சாடா.
இவர் தனது திருமணம், குழந்தைகள் பற்றிய எதிர்காலத்தை இன்னும் தீர்மானிக்காததால், பிற்காலத்தில் அது தொடர்பாக பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தன்னுடைய கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் தனிப்பட்ட ஒன்றைப் பகிரலாமா வேண்டாமா என்று யோசித்தேன், ஆனால் என்னைப் போன்ற எத்தனையோ பெண்கள் எப்பொழுது திருமணம் செய்துகொள்வது அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது என்று இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்றுணர்ந்து, எதிர்காலத்திற்காக உங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று தான் நினைத்ததால் தான் இது தொடர்பாக தான் பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனரீதியாக இதற்கு தயார்படுத்திக் கொள்ள தனக்கு இரண்டு வருட காலம் தேவைப்பட்டதாகவும், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க எல்லாப் பெண்களும் இதைச் செய்ய வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/C6Xm-TwvinC/?utm_source=ig_web_copy_link
இது ஒரு தடைப்பட்ட தலைப்பு என்று கருதப்படுவதால், நாம் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.
தொழில்நுட்பத்தின் உதவியுடன், நமக்கான சிறந்த முடிவுகளை எடுக்க முடிகிறது, தாயாக வேண்டும் என்பது எனது கனவு, சில வருடங்கள் தாமதமாகிவிட்டதால் அதை தூக்கி எறிய விரும்பவில்லை.
இது உங்களை காயப்படுத்தியதா? சில சமயம். சவாலாக இருந்ததா? நிறைய. குறிப்பாக ஊசி, ரத்தம் மற்றும் மருத்துவமனைகள் மீது ஃபோபியா உள்ள என்னைப் போன்ற ஒருவருக்கு.
https://www.mugavari.in/news/cinema-news/malayalam-actor-mohanlal-in-kantara-2/2318
நான் மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம் நான் மயக்கமடைகிறேன், எல்லா ஹார்மோன் ஊசிகளாலும் நீங்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான உணர்ச்சிக் கொந்தளிப்பு எளிதானது அல்ல. நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்காகச் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…