தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. மேலும் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், சாதுரியன், அன்னக்கொடி மற்றும் பேபி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள ‘எங்கே அந்த வெண்ணிலா’, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்’, ‘திருப்பாச்சி அருவாள’ ஆகிய பாடல்கள் இன்றளவிலும் ரசிகர்களிடம் மிகப்பிரபலம். எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநர், தொழில்நுட்ப கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். தனது தந்தை பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான மனோஜ், கடந்த 2023ம் ஆண்டு தான் இயக்கிய முதல் படமான ‘மார்கழி திங்கள்’ படத்தில் தனது தந்தையையே முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
தொடர்ந்து திரையுலகில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்து வந்த மனோஜ் பாரதிராஜா, இன்று(மார்ச் 25) மாரடைப்பால் காலமானார். இன்று மாலை வீட்டிலிருந்த போது மனோஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 48. மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…