உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நாம் மனோகர் நாராயண் மிஸ்ரா, பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் தனது தீர்ப்பில், “சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும், அவரது பைஜாமா ஆடையின் கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பது போன்ற செயல்கள் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது” என்று தெரிவித்தார்.
மேலும், பெண்ணின் ஆடைகளை இழுத்து தாக்குதல் அல்லது நிர்வாணமாக்கும் நோக்கத்துடன் தாக்குதல் என்கிற வரம்பிற்குள் வருவதாகக்கூறி, குற்றம் சாட்டப்பட்டவரின் மேல் பதியப்பட்ட வழக்குகளின் பிரிவுகளை மாற்றியும் உத்தரவுகளை பிறப்பித்தார். உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால், இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்ப விமர்சித்துள்ளார். இந்த தீர்ப்பு முற்றிலும் தவறாது என்றும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தியை கொடுக்க விரும்புகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு சிறுமி இதுபோன்று கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியும், அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படாது எனில், பாலியல் வன்கொடுமைக்கு இவர்கள் வைத்திருக்கும் அளவு என்ன? இந்த விவகாரத்தில் உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…