ஹிட்லர் படத்திற்கு கிடைத்த வெற்றியை நடிகர் விஜய் ஆண்டனி ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
விஜய் ஆண்டனி சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாகவும் உருவெடுத்து தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாக்கி இருக்கும் ஹிட்லர் திரைப்படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை எஸ் ஏ தனா இயக்கியிருந்த நிலையில் செந்தூர் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருந்தது.
படத்தில் விஜய் ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் மணிரத்னம், மாரி செல்வராஜ், லிங்குசாமி, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் போன்ற திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தினை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி, மதுரையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்று ஹிட்லர் படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் பலரும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டு தங்களின் அன்பை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…