விமல் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் போகுமிடம் வெகு தூரமில்லை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் நடிகர் விமல் சார் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தினை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. படத்தில் விமலுடன் இணைந்து சரவணன், சாயாதேவி கண்ணன், ரமா, சிராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இனியன் ஜெய் ஹரிஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். கல்வி தொடர்பான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான தமிழ், சார் படத்தை பாராட்டியுள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “சார் படம் பார்த்தேன். இந்த படம் தனிப்பட்ட முறையில் என்னை கனெக்ட் பண்ணியது. அரசு பள்ளி அவசியம் என்பதையும் அரசு பள்ளியின் தேவையையும், அந்த ஊரில் இருக்கின்ற பிரச்சனை குறித்தும் இந்த படம் பேசியுள்ளது. அதாவது இன்றைய நடைமுறைக்கு தேவையான பிரச்சனைகளை பேசுகின்ற படம். எனவே சார் படம் தமிழ் சினிமாவிற்கு முக்கியமான படம். அரசு பள்ளி மாணவர்களின் கல்வி குறித்து பேசுகின்ற நிறைய படங்கள் வருகிறது. அந்த வரிசையில் இந்த படம் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…