இந்த படத்தினை உண்டர்பார் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் நிறுவனத்தின் சார்பில் கஸ்தூரிராஜாவும் விஜயலட்சுமி கஸ்தூரிராஜாவும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.
லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து கோல்டன் ஸ்பேரோ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. கிட்டத்தட்ட முப்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது இந்த பாடல்.
எனவே அடுத்ததாக இந்த படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் இரண்டாவது பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் எனவும் அந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. ஆகையினால் கோல்டன் ஸ்பேரோ பாடலைப் போல இந்த பாடலும் பட்டிதொட்டி எங்கும் ட்ரண்டாகும் என்று நம்பப்படுகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…