அரசியல்

பெரம்பலூரில் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை – அருண் நேரு

பெரம்பலூரில் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை – அருண் நேரு

குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், ஏரி, குளங்களில் உபரி நீரை பைப்லைன் மூலம் கொண்டு வந்து நிரப்பவும், மக்களுக்கு பொது சுகாதாரம், அரசு தொழிற்கல்வி கல்லூரி, விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேரு பேட்டி அளித்துள்ளார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேரு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தோகைமலையில் அவரை ஆதரித்து நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் மத்திய அரசு தமிழ்நாட்டிற்க்காக தரவேண்டிய நிதியினை தர மறுத்து வருவதாகவும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி போராடி நிதிகளை கேட்டபோதும் தரவேண்டிய நியாமான நிதியினை பிரதமர் தராமல் இருப்பதாகவும், ஜிஎஸ்டி நிலுவை தொகை, 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பள பாக்கி தொகை, பேரிடர் கால நிவாரண நிதியினை வராமல் இருந்து வருவதாகவும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்து வருகிறார்கள்.

எனவே அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த தமிழக முதல்வர் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரதமர் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே பிரதமர் மோடி சுய போட்டு வருவதாகவும், தமிழ்நாட்டிற்கு தேர்தலுக்காக அடிக்கடி வரும் பிரதமர் எந்த ஒரு திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கவில்லை எனவும், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் குடிநீர் பட்டுப்போன நிலைமை வருவதால் பொதுமக்கள் காவிரி கூட்டு குடிநீர் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இன்னும் ஒரு வருட காலத்திற்குள் தோகைமலைக்கு என்று தனி கூட்டு குடிநீர் திட்டமாக செயல்படுத்தி வைபேன் என்றும் ஏரி குளங்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து வரும் உபரி நீரை பைப் லைன் மூலம் கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து அருண்நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குளித்தலை சட்டமன்றம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்கள் பலரும் குடிநீர் மற்றும் விவசாய தண்ணீர் பிரச்சனையை பொதுமக்கள் முதன்மை கோரிக்கையாக வைத்து வருவதாகவும், தேர்தலுக்குப் பின்னர் இதுகுறித்து நடவடிக்கை ஆய்வு பணிகள் மேற்கொண்டு காவிரி ஆற்றில் இருந்து பைப்லைன் மூலம் ஏரி குளங்களை நிரப்பி இப்பகுதியில் மீண்டும் விவசாயம் செழித்திடவும், இப்பகுதி மக்களுக்கு எவ்வழியாக கொண்டு வந்து தண்ணீர் தர முடியும் என்பதை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.

மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் அரசு தொழிற்கல்வி கல்லூரி வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இப்பகுதியில் அரசு தொழிற்கல்வி கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் போது சிறுகுறு தொழில் நிறுவனங்கள் நடத்தும் வகையில் சிட்காட் அல்லது சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை இன்றி அவர்களின் பொது சுகாதாரம் முன்னுரிமை அளித்து கிராமப்புற பகுதிகளில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கவும், மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், குளித்தலை சட்டமன்ற தொகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உனது நெல், கரும்பு, வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிட்டு வருவதாகவும், வாழை மற்றும் வெற்றிலை குளிர்பதனை கிடங்கு அமைப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வெற்றிலை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அந்த பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது இன்சூரன்ஸ் தொகையை கூட பெற முடியவில்லை என கோரிக்கை வைத்ததாகவும் இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கோரிக்கை வைத்துள்ளதாகவும், வெற்றிலை பயிருக்கு இன்சூரன்ஸ் கிடைக்க வழிவகை செய்தும் குளிர் பதன கிடங்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை மாயனூர் வரை நான்கு வழிச்சாலையாகவும், குளித்தலை வழியாக செல்லும் நெடுஞ்சாலை இரு வழிசாலையாக உள்ளதாகவும் இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் நான்கு வழிச்சாலையாக விரிவு படுத்த நடவடிக்கை எடுப்பீர்களா என கேள்வி எழுப்பிய போது குளித்தலை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒருபுறம் காவிரி ஆறும், மற்ற இடங்களில் பாசன வாய்க்கால்கள் இருப்பதால் விரிவு படுத்தும் பணியில் சிரமம் உள்ளதாகும் அதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்வதற்கு ஆய்வுகள் மேற்கொண்டு பஞ்சப்பூர் ரிங் ரோடு மற்றும் முக்கொம்பு பகுதியில் ரிங் ரோடு அமைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.

Editorial team

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி