இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். ஈகோ கிளாஸ் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றுள்ள இந்த படம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷணனிடம் ஒரு வரி கதையை கேட்டிருப்பதாக சொல்லப்பட்டது.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் ,ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை சந்தித்து தனது அடுத்த படத்தின் முழு கதையையும் சொல்லி இருப்பதாகவும் அதற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்லி விட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சிவகார்த்திகேயன் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் புதிய படம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் அமரன், SK 23 ஆகிய படங்களுக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…