தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக் 27ல் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் தவெக முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் பால முருகன் தலைமையில் அம்பத்தூர் அடுத்த முகப்பேர் சந்தன சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர்.
இதில் நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டு வழிப்பட்டப்பின் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தமிழக வெற்றி கழக கிழக்கு மாவட்டம் சார்பில் மாநாடு வெற்றி பெற சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேற்று தளபதி படத்திற்கான பூஜை இன்று மாநாட்டின் தலைவர் தளபதிக்காக நடைபெறும் பூஜையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் மாநாட்டிற்காக என்னை பணியாற்ற கூறி எனக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். நடிகராக அவருடன் பணியாற்றியுள்ளேன், ஆனால் கட்சியில் தற்போது தொண்டர்களுடன் சேர்ந்து பணியாற்றி தலைவர் எதிர்ப்பார்ப்பதை செய்து முடிப்பேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து விஜயின் கடைசி படம் இது தான் என்பதை தண்ணீரில் தான் எழுத வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்திற்கு பாண்டிசேரியில் இருந்ததால் தண்ணீரில் எழுத வேண்டும் என கூறுகிறார்கள் என்று பதிலளித்தாா். ஒருவர் வந்து பணி செய்வதற்கு முன்பே பேசுகிறார்கள், அதுவே எங்களுக்கு வெற்றி தான். அவர் வந்து என்ன செய்கிறார் என 2027ல் பார்த்துவிட்டு பின் பேசட்டும் என தெரிவித்தார்.
இந்த கட்சியில் பணியாற்றிவது ஒரே ஒரு முகத்திற்காக தான் அது தளபதி விஜய் அவர்களுக்கு தான்.. முதல் கட்சியின் மாநாட்டிற்கு ராணுவ கட்டுப்பாடுடன் எந்த கட்சியும் நடந்ததில்லை, முதல் மாநாட்டிற்கே கட்சி தலைவர் அறிவுறுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…