17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப்vsகுஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 37வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளன. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி இந்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம் கடந்த போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…