இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
மனோஜ் பாரதிராஜா
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார்.

தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. மேலும் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், சாதுரியன், அன்னக்கொடி மற்றும் பேபி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள ‘எங்கே அந்த வெண்ணிலா’, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்’, ‘திருப்பாச்சி அருவாள’ ஆகிய பாடல்கள் இன்றளவிலும் ரசிகர்களிடம் மிகப்பிரபலம். எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநர், தொழில்நுட்ப கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். தனது தந்தை பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான மனோஜ், கடந்த 2023ம் ஆண்டு தான் இயக்கிய முதல் படமான ‘மார்கழி திங்கள்’ படத்தில் தனது தந்தையையே முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

மனோஜ் - பாரதிராஜா

தொடர்ந்து திரையுலகில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்து வந்த மனோஜ் பாரதிராஜா, இன்று(மார்ச் 25) மாரடைப்பால் காலமானார். இன்று மாலை வீட்டிலிருந்த போது மனோஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 48. மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு அனுமதி மறுப்பு! #tvk #thalapathy #thaveka #mugavarinews #vijya
02:42
Video thumbnail
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் முன் சாலை சிதில்! மக்கள் ரோஷம்! #Poonamallee #PoonamalleeRoad
01:07
Video thumbnail
ஒவ்வொரு ஆண்டும் இதே துயரம்! சோழவரம் குடியிருப்போர் வேதனை! #Chozhavaram #Alamathi #TamilNaduRain
01:02
Video thumbnail
சோழவரத்தில் 2வது நாளாக வீடுகள் நீரில்! குழந்தைகள் நோய் அச்சத்தில்! #Chozhavaram #alamathi
01:18
Video thumbnail
ஜோதி நகர் மூழ்கியது! மோட்டார் வேலை செய்யலையா? மக்கள் குற்றச்சாட்டு! #avadi #nasar #mugavarinews
00:51
Video thumbnail
சென்னை–பெங்களூர் நெடுஞ்சாலையில் கார், வேன் மூழ்கியது! அதிர்ச்சி காட்சி! #chennai #tnrain #heavyrain
01:47
Video thumbnail
கரூர் சம்பவம் - சிபிஐ விசாரணை ரத்தாகுமா? விஜய்க்கு எதிராக மாறும் களம் #avadi #karur #tvk #talapathy
01:56
Video thumbnail
செங்கோட்டையனை கேவலப்படுத்திய விஜய்
01:05
Video thumbnail
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
01:15
Video thumbnail
சென்னை தம்பதியர் தவறவிட்ட 17 சவரன் நகை | போலீசார் சில நிமிடங்களில் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்
01:41
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img