ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது இந்த சுரங்க பாதையில் கோபாலபுரம் சேக்காடு தென்றல் நகர் வி.ஜி.என். குடியிருப்பு போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலம் என்றாலே இந்த சுரங்கப்பாதை நீரால் மூழ்கி காட்சியளிக்கும் நிலை ஏற்படுகிறது இதனால் இப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
இந்த சுரங்கப் பாதையில் தேங்கி இருக்கக்கூடிய நீரை வெளியேற்றுவதற்காக நீர் இறைக்கும் ராட்சத மின்மோட்டார்கள் ஆவடி மாநகராட்சியால் அருகாமையில் அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் குறைந்த அளவே வெளியேறுவதால் கூடுதல் ராட்சத மின்மோட்டார்கள் அமைத்திடவும், சென்னை – திருத்தணி நெடுஞ்சாலையில் தேங்க கூடிய நீர் முழுவதும் இந்த சேக்காடு சுரங்கப்பாதையில் செல்வதால் விரைவில் சுரங்கப்பாதை நீரால் நிரம்பி விடுகிறது சிடிஎச் சாலையில் செல்லக்கூடிய மழை நீரை மாற்று பாதையில் கொண்டு செல்லவும் புதிதாக கூடுதல் ராட்சத நீர் இறைக்கும் மின்மோட்டார்கள் அமைத்திடவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்…
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…