தமிழ்நாடு

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கக் கூடாது – நீதிபதி

குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்டாலின் பாரதி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பு கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். அதன் அடிப்படையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராஜ்குமார் என்பவர் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றது. இதனால் தனக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்கக் கோரி ஸ்டாலின் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ராஜ்குமார் கொலை வழக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாலும், சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் குண்டர் சட்டத்திலும் சிறையிலடைக்கப்பட்டதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க மறுத்ததாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்கள் பிரச்னைகளுக்காக பலர் உயிரிழந்துள்ளனர். ஊழல், சமூக விரோத செயல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்… மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் அரசு செலவில் பாதுகாப்பு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குற்ற நடவடிக்கைகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு,  அச்சுறுத்தல்களின் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஸ்டாலின் பாரதியின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி