மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இடிய 2092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,154 பேருத்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10.214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற் சிறப்பு இயக்க தினங்களில் 18/04/2024 அன்று சென்னையிலிருந்து புறப்படவுள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு பெரும்பாண்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. 16/04/2024 மற்றும் 17/04/2024 ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முன்பதிவில் காலியாக உள்ள இருக்கைகளின் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
எனவே 18/04/2024 அன்று கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு 16/04/2024 மற்றும்
17/04/2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…