சாலையில் தறிகெட்டு ஓடிய கார் – 2 பேர் படுகாயம்
சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் சைக்கிள் ஓட்டியவர் மீது மோதிய விபத்தில் கார் ஓட்டியவரின் மனைவி உட்பட இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் தனது மனைவியுடன் ஃபோர்ட் ஃபிகோ காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் கட்டுபாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எர்டிகா, மற்றும் மாருதி ஆல்டோ கார்கள் மீது மோதி பின் சைக்கிளில் வந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த சந்திரனின் மனைவிக்கு கழுத்து மற்றும் வாயில் காயம் ஏற்பட்டது.
மேலும் சைக்கிளில் வந்தவருக்கு இடது கை தோல் பட்டை எலும்பு முறிந்த நிலையில் இருவரையும் ஆவடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/today-gold-rate-9/1712
இது தொடர்பாக அம்பத்தூர் போக்குவரத்து போலிசார் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…