Categories: Uncategory

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்…!

கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே அடுத்ததாக கார்த்தி இழந்த தனது வெற்றியை எப்படி மீட்டெடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

எனவே கார்த்தி ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக மெய்யழகன் திரைப்படம் வந்துள்ளது. கார்த்தியின் 27 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். சூர்யாவின் 2D நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இதற்கு இசை அமைக்க மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிராமத்துக் கதைக்களத்தில் எமோஷனல் கலந்த குடும்பப் பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

இப்படமானது நாளை (செப்டம்பர் 27) திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கு முன்பே சினிமா விமர்சகர்களுக்கும், ஊடகத்தினர்களுக்கும் இந்த படத்தின் பிரத்தியேக காட்சி போட்டு காட்டப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தினை பார்த்த பலரும் சமூக வலைதள பக்கத்தில் படம் குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது, மெய்யழகன் படம் உணர்வுபூர்வமான படம் என்றும் பல உணர்வுபூர்வமான காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.

மற்றொருவர், மெய்யழகன் திரைப்படம் நினைத்ததை விட அருமையாக வந்திருப்பதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் நம் வாழ்க்கையுடன் கனெக்ட் செய்யும் விதமாக அமைந்துள்ளதாகவும் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரும் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு படம் குறித்து தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி