GST வரி அல்ல… வழிப்பறி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

"பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

ஏழைகளைச் சுரண்டும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என முதலமைச்சர் மு.க.டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், GST வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்! அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | உதயநிதிக்கு புதிய பொறுப்பு | அதிமுகவுடன் தவெக சேருமா? | DMK |ADMK
14:43
Video thumbnail
2026 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் - திருமாவளவன்
04:28
Video thumbnail
மே தினத்தின் வரலாறு | May Day | Karl Marx
00:53
Video thumbnail
யார் இந்த சிங்காரவேலர் | Singaravelar | May Day
00:52
Video thumbnail
இந்தியாவில் முதல் மே தினம் எங்கு கொண்டாடப்பட்டது May Day
00:37
Video thumbnail
மே தினத்தின் வரலாறு | தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி பெற்ற ஒரு விடுமுறை நாள் | May Day | Mugavari News
07:07
Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img