spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

“கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க.வின் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, சேலம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை அறிமுகம் செய்து வைத்ததுடன், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு ரெங்கநாதர் பிரம்மோற்சவத்தில் இடம் பெற்ற தேரோட்டம்!

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், எம்.கே.செல்வராஜ், ஓமலூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை; கூட்டணி இல்லையென்றாலும் சொந்தக்காலில் நிற்போம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அ.தி.மு.க. முக்கிய காரணம். அ.தி.மு.க. வென்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊழல் நிலவுகிறது.

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள்!

பா.ஜ.க.வுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளித்த ராமதாஸ் தற்போது அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்; தமிழ்நாட்டில் பா.ம.க. கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. டெல்லியில் ஊழல் நடந்ததா, இல்லையா எனத் தெரியவில்லை; தவறு நடந்தால் கைது செய்யட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34% உயர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:32
Video thumbnail
ரசிகர்களைக் கண்டித்த அஜித்.. Please Behave Yourself...
00:20
Video thumbnail
விஜய், அவர் வந்தே ஆகணும்; மக்கள் நினைச்சா விஜய் கண்டிப்பா வந்துடுவார் - சிவகுமார்
01:20
Video thumbnail
கோட்டை முதல் குமரி வரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருள்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
01:21
Video thumbnail
ரீ-ரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே | சூர்யா வெளியிட்ட வீடியோ
01:15
Video thumbnail
டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்
00:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்
00:58
Video thumbnail
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:49
Video thumbnail
திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த SelfieVideo
00:33
Video thumbnail
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை; நகராமல் அங்கேயே நின்ற தாய் யானை
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img