இன்று மாலையுடன் மக்களவை தேர்தல் பிரசாரம் ஓய்கிறது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று மாலை 6 மணியுடன் தமிழ்நாடு-புதுச்சேரியில் மக்களைவை தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக சார்பில் பிரதமர் மோடி 9 முறை தமிழகம் வந்து பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தார். அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமானும் கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு-புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் (ஏப்ரல்-19-ந் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் அ.தி.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகியவை போட்டியிடுகின்றன. பா.ஜ.க சார்பில் பா.ஜனதா, அ.ம.மு.க, தமாகா, ஓபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஜ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சியினர் மட்டும் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரமானது இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

 

Video thumbnail
அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?
00:50
Video thumbnail
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிச்சாமி
00:56
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார்
00:58
Video thumbnail
அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்
00:32
Video thumbnail
நாடாளுமன்றத்திற்கு GoodBye சொல்லிட்டு வந்துட்டேன்
00:49
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது
00:32
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது | மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
05:16
Video thumbnail
சின்னத்திரை நடிகை ஆவடி காவல் ஆணையரிடம் புகார்.. பெரும் பரபரப்பு | Serial Actress | Avadi | Police
08:27
Video thumbnail
முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு?
01:08
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார் | கலக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி
11:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img