மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வேட்பாளர் செலவினத்தை உயர்த்தியது தேர்தல் ஆணையம்!

மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்வடைந்தது. இந்த நிலையில், நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனிடையே மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் உள்ளனர். 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து பேசிய அவர், மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம் என கூரினார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்களை தயாராக வைத்துள்ளோம் எனவும், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்தார். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கலாம் எனவும் கூறினார்.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img