spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் – முதலமைச்சர் ஒப்பந்தம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் – முதலமைச்சர் ஒப்பந்தம்

உலகின் சிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாக்குவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிப்புக்கான ஆலையை திறக்கயிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தயாரிப்பு பணி தொடங்க இருக்கிறது.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

இது தொடர்பான முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது.

இதன் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு கணிசமான ஊதியத்துடன் கூடிய தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

அமெரிக்காவின் டெட்ராய்டு நகர் போல ராணிப்பேட்டையை சுற்றி ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபெண்டர் போன்ற உயர்ரக சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ராணிபேட்டையில் உலகின் சிறந்த கார் நிறுவனம் - முதலமைச்சர் ஒப்பந்தம்

பிரிட்டன், சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஜே.எல்.ஆர். கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. அதேபோல தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜெ.எல்.ஆர். கார்கள் பிரிட்டானிலிருந்து இறக்குமதியாகின்றன.

ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக உற்பத்தியை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/cm-mk-stalin-tweet-3/1313

உலகின் சிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மூலம் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ராணிபேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.

Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது மகளுடன் வந்து சாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார்
01:22
Video thumbnail
மே 4ம் தேதி நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
01:32
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு | MK Stalin | DMK
01:21
Video thumbnail
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி | கருத்துக் கணிப்பு முடிவுகள்
01:19
Video thumbnail
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி | கருத்துக் கணிப்பு முடிவுகள் | DMK | MK Stalin | ADMK | EPS |TVK Vijay
12:35
Video thumbnail
பெங்களூருவில் நேற்று (ஏப்.29) ஆலங்கட்டி மழை
00:25
Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய்
01:04
Video thumbnail
விஜய் வரவால் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு? திமுகவிற்கா? அதிமுகவிற்கா?
01:52
Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்
00:40
Video thumbnail
திமுக, அதிமுக, தவெக அமைச்சரவை பட்டியல் தயார்… யார் ஆட்சி அமைப்பார்கள்?
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img