spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05% வாக்குகள் பதிவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன் தினம் ஓய்வடைந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் உள்ளனர். 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரியில் 44% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img