spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 13 பேர் கைது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னை – லக்னோ அணிகள் மோதிய போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 39வது லீக் போட்டியில், ரூத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 3 ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்னிலும் ரவீந்திர ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாய் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 210 ரன்கள் குவித்தது.

பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயிண்டன் டிகாக் ரன் ஏதுமின்றியும், கேஎல் ராகுல் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அபாரமாக விளையாடி சதம் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு வித்திட்டார். அவர் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ அணியானது 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளூக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் அவர்களை ஜாமினில் விடுவித்தனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த ஐயுஎம்எல் நிர்வாகிகள்..
00:25
Video thumbnail
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் ஆளுநர் அர்லேக்கர் மற்றும் முதல்வர் விஜய் குழு புகைப்படம்..
01:01
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்
02:13
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி
02:12
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் அவநாசி எம்எல்ஏ கமலி
02:07
Video thumbnail
"எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்" - MLA-விடம் ஆவடி வணிகர்கள் உருக்கமான மனு..
02:35
Video thumbnail
தூத்துக்குடி தொகுதியில் வென்ற ஸ்ரீநாத் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்
02:11
Video thumbnail
சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை;
02:21
Video thumbnail
நாம் இன்று முக்கியமாக நம்பக் கூடாத ஒன்று இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்
02:05
Video thumbnail
காதலித்து ஏமாற்றிய காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
01:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img