spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று முதல் வருகிற மே 01ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 29.04.2024 முதல் 01.05.2024 வரை: கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

03.05.2024 முதல் 05.05.2024 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 29.04.2024 முதல் 01.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுப் பெட்டகங்களை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
01:34
Video thumbnail
"இதனால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.." அமைச்சர் அருண்ராஜ்
01:44
Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
Video thumbnail
"திரும்பவும் ரஜினி சாருடன் படம்.. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு நன்றி”- நடிகை சிம்ரன்
01:34
Video thumbnail
40 வருஷத்துக்கு முன்ன நாங்க எடுத்த முடிவு.. ரஜினி குறித்து மேடையில் சொன்ன கமல்
02:03
Video thumbnail
பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்.!
01:16
Video thumbnail
"கமல் செஞ்ச உதவிக்கு.." ரஜினி சொன்ன உண்மை நிகழ்வு..
02:03
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img