spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இணைந்து சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், கடந்த 19.04.2024 அன்று தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்-2024 நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆயுதங்கள் ஏந்திய காவல் குழுவினர் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு ணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ண பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில், இணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், துணை ஆணையாளர்கள் தலைமையில் மேற்படி 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய ஆயுத காவல் படையினரும் (CAPF), 2வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் (Tamilnadu Special Police), 3வது அடுக்கில் சென்னை பெருநகர ஆயுதப்படையினரும் (Armed Reserve). 4வது அடுக்கில் சென்னை பெருநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு. குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர். இகாய மற்றும் ஆகியோர் இணைந்து இன்று (29.04.2024) காலை ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லுரி ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். மேலும், அங்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்து மேற்படி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து. பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் #Tirupati #Samantha #RajNidimoru
00:55
Video thumbnail
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் - எடப்பாடி பழனிசாமி
01:12
Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றம் தொடங்கியது; தேசிய கீதம் பாடக் கூடாது என்பது இல்லை;
01:18
Video thumbnail
சட்டமன்றத்திற்கு ஆளுநர் அர்லேக்கர் வருகை.. பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் JCD பிரபாகர் வரவேற்பு
01:59
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் JCD பிரபாகர்
00:32
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருகை!
00:51
Video thumbnail
தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம்: ரூ.38,000 கோடி முதலீடு, 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
00:20
Video thumbnail
தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திரண்டிருந்த மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய்
00:36
Video thumbnail
தயவுசெய்து உங்கள் ஆட்சியை பற்றி வரக்கூடிய செய்திகளை படியுங்கள்..- விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
02:17
Video thumbnail
"என்னை மன்னித்துவிடுங்கள்!" - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மாஸ்டர் மகேந்திரன்!
02:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img