spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

இ – பாஸ் உத்தரவால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள் – ஜவாஹிருல்லா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இ – பாஸ் உத்தரவால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான உதகை மற்றும் கொடைக்கானல் , அம்மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது. ஆனால், உயர்நீதிமன்றம் அங்குச் செல்லும் வாகனங்கள் ஈ பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள திட்டம் இப்பொழுது செயல்படுத்தப்பட்டால், உதகை மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்கள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளவர்கள். இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள். அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும்.

மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை மனுத் தாக்கல் செய்து இந்த புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இரு மலைத் தலங்களுக்கும் செல்லும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் கூடுதல் காவலர்களை காவல்துறை பணியில் அமர்த்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
01:47
Video thumbnail
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல் நடத்திய ஈரான்
00:45
Video thumbnail
"பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது."-ரஞ்சனா நாச்சியார்
01:39
Video thumbnail
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உ*ரிழப்பு
00:46
Video thumbnail
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மு.வீரபாண்டி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
01:21
Video thumbnail
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கினார் முதலமைச்சர்
00:33
Video thumbnail
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜர்
00:46
Video thumbnail
எந்த தொகுதியில் போட்டி? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் குஷ்பு பதில்
00:44
Video thumbnail
தந்தையின் இறுதி சடங்கு செய்து விட்டு தேர்வு எழுத சென்ற மாணவன்
01:55
Video thumbnail
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
02:00
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img