spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நள்ளிரவு 01.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னையில் ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு நள்ளிரவு 01.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 26) மாலை 07.30 மணிக்கு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இன்று இரவு 11:00 மணி முதல் அதிகாலை 01:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும். மேலும், போட்டிக்குப் பிறகு, அரசினர் தோட்டம் /புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் மேலும் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மே 26- ல் சென்னையில் ஐ.பி.எல். இறுதிப் போட்டி!

ஆன்லைனில் (CMRL mobile App, Paytm app, Phonepe app, WhatsApp, ONDC etc) மூலம் பயணச்சீட்டை பெறலாம் அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூபாய் 50 செலுத்தி பெற்றுக் கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் வெளியேறலாம். இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்து கொள்கிறது. மேலும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img