10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 26) தொடங்கி, ஏப்ரல் 08- ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன. 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வுகளை எழுத் உள்ளனர். 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறையில் வந்த ராணுவ வீரர் அரங்கேற்றிய கொடூர செயல்!

12,616 பள்ளிகளில் படிக்கும் 4,57,525 மாணவர்களும், 4,52,498 மாணவிகளும் மூன்றாம் பாலினத்தவர் 1 என 9,10,024 பேர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் பணிகளில் 48,700 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

தேர்வு முறையாக நடத்தப்படுவதைக் கண்காணிக்க 3,350 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலையான கண்காணிப்புப் படையினர் 1,241 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று தமிழ் மொழி பாடத்தேர்வும், மார்ச் 28- ல் ஆங்கிலமும், ஏப்ரல் 01- ஆம் தேதி கணித தேர்வும் நடைபெறவுள்ளது.

செலவிற்கு வேறு பணமில்லை எனக் கூறி கதறி அழுத வடமாநில பெண்!

ஏப்ரல் 04- ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 06- ஆம் தேதி விருப்ப மொழிப்பாடமும், ஏப்ரல் 08- ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகின்றன. தேர்வு நடைபெறும் நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்துச் செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்து தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img